Posts

Showing posts from July, 2018

ஆசையா வளர்த்த நகம் உடைஞ்சுடுச்சா?

Image
ஆசையா வளர்த்த நகம் உடைஞ்சுடுச்சா?? அப்போ இதை செய்யாதிங்க... நகங்கள் எளிதில் உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களைச் சாப்பிட வேண்டும். தரமான நகச்சாயங்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அப்போது தான் நகத்திற்கு எவ்வித பாதிப்பும் வராது. நகச் சாயம் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நகச்சாய ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது. தினமும் நகச் சாயம் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும். எனவே வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நகச் சாயம் உபயோகிக்காமல், இருப்பது நல்லது. ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.

உதடு கருப்பா இருக்கா? இதை செய்யுங்க....

Image
உதடு கருப்பா இருக்கா? இதை செய்யுங்க.... பீட்ரூட்டை துண்டாக நறுக்கி அதை ஃப்ரிட்ஜில் வைத்து, பின் குளிர்ச்சியானதும், அந்த பீட்ரூட் துண்டுகளை எடுத்து உதடுகள் மீது 2 நிமிடம் மசாஜ் செய்து, பின் 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதே போல் தினமும் செய்தால், உதடுகளில் உள்ள கருமை விரைவில் மறைந்து விடும். மேலும், தினமும் இரவில் படுப்பதற்கும் முன்பு எலுமிச்சை சாற்றில், சிறிதளவு சர்க்கரையை சேர்த்து, சர்க்கரை கரைவதற்குள், அதனை உதடுகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, பின் 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இப்படி தினமும் செய்தால் சிவப்பாய் மாறும்.