உதடு கருப்பா இருக்கா?இதை செய்யுங்க !
உதட்டுக் கருமையைப் போக்க சற்று நாட்கள் பிடிக்கும், உடனடியாக பலனை எதிர்ப்பார்க்க வேண்டாம். அவ்வாறான நல்ல பலன் தரக் கூடிய குறிப்புகளை பார்க்கலாம்.
எலுமிச்சை மற்றும் புதினாசாறு : புதினாவில் இலைகளில் இருந்து சாறு எடுத்து அதில் கால் பங்கு எலுமிச்சை சாறு கலந்து உதட்டில் தேயுங்கள். விரைவில் பலன் தரும் அருமையான குறிப்பு இது. உதட்டின் நிறம் மெல்ல பழைய இயற்கை நிறத்திற்கு பெறும்.
பீட்ரூட் சாறு : பீட்ரூட் துண்டை அல்லது சாற்றினை உதட்டில் பூசி காய்ந்த பின் கழுவினால் உதடுகள் மெருகேறும். சிவப்பு நிறம் பெறுவதோடு இயற்கை லிப்ஸ்டிக்காக் விளங்குகிறது.
பிரஷ் : தினமும் காலை மற்றும் இரவில் டூத் பிரஷினால் சில நொடிகள் மசாஜ் செய்யுங்கள். இப்படி செய்தால் ரத்த ஓட்டம் தூண்டப் பெற்று இறந்த செல்கள் வேகமாக அழிகின்றன. இதனால் கருமையான நிறம் மாறி சிவப்பாக ஜொலிக்கின்றது.
தக்காளி சாறு மற்றும் மஞ்சள் : தக்காளி சாறு எடுத்து அதில் சிறிது மஞ்சள் கலந்து உதட்டில் தடவ வேண்டும். காய்ந்ததும் கழுவுங்கள். தினமும் செய்து வந்தால் உதடுகள் மீண்டும் சிவப்பாகி வருவதை காண்பீர்கள்.
Comments
Post a Comment