எந்த சத்து குறைந்தால் முடி உதிரும்?
முடி உதிர்வது நிற்க வேண்டுமா?
பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது. முடி நன்கு வளர வேண்டுமானால், புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது.
தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், இறைச்சி முதலியவற்றில் புரோட்டின் சத்து உள்ளது. ஆனால், தாவரப் பொருட்களில் இருந்து கிடைக்கும் புரோட்டினை விட இறைச்சிகளில் இருந்து கிடைக்கும் புரோட்டின் சிறந்தது. அதனால், தாவரப் புரோட்டின் தேவையில்லை என்று கருதக்கூடாது. இரண்டுமே உடலிற்கு அவசியமானதுதான்.
தாவர வகைகளில் சோயா பீன்ஸில்தான் அதிக அளவில் புரோட்டின் இருக்கிறது. 100 கிராம் சோயா பீன்ஸில் 43 கிராம் புரோட்டின் கிடைக்கிறது. இறைச்சியில் இருந்து கிடைக்கக்கூடிய புரோட்டின் சத்துவிற்கு இணையாக சோயா பீன்ஸில் மட்டும்தான் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பால், தயிர், மோர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன் முதலியவைகளில் இருக்கும் புரோட்டின் சிறந்ததாகும். வளரும் குழந்தைகளுக்கு பாலும், முட்டையும் சிறந்த உணவாக இருக்கும்.
கோதுமை, சோளம், கம்பு, கேழ்வரகு, அரிசி முதலிய தானியங்களில் புரோட்டின் சத்து உண்டு. மேலும், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைப்பருப்பு, துவரம் பருப்பு, பட்டாணி, அவரைக்கொட்டை, பீன்ஸ் கொட்டை, மொச்சைக்கெட்டை முதலிய பருப்பு வகைகளிலும் புரோட்டின் உண்டு.
இதுதவிர, முந்திரிப் பருப்பு, வாதுமைப் பருப்பு, நிலக்கடலை, அக்ரூட் பருப்பு முதலியவைகளிலும் புரோட்டின் சத்து உள்ளது.
கிழங்கு வகைகளில் உருளைக்கிழங்கு, கேரட் கிழங்கு, பீட்ரூட் முதலியவைகளிலும் புரோட்டின் சிறிதளவு உள்ளது.
Comments
Post a Comment