விரல் முட்டிகளில் கருப்பு மாற இதை டிரை பன்னுங்க
இந்த காலத்தில் இவ்வாறு கைகள் கருத்து போவது என்பது பலர் சந்திக்கக் கூடிய பொதுவான பிரச்சனைகளில் ஒன்று.
இறந்த இரத்த செல்கள் அதிகமாக உடலில் சேர்வது. இவையெல்லாம் தான் கைகள் கருப்பாக மாறுவதற்கான காரணங்கள்.
எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்
எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்சிறிது சர்க்க்ரையுடன் சில சொட்டுகள் எலுமிச்சைச் சாற்றை சேர்த்து கலந்து அதனை விரல்களின் மேல் தேய்க வேண்டும். சிறிது நேரம் கழித்து அதனை வெதுவெதுப்பான நீரினால் கழுவி விடுங்கள். அல்லது பாதி எலுமிச்சை பழத்தை எடுத்து அதன் மீது சர்க்கரையைத் தூவி அப்படியே கைகளின் மீதும் தேய்க்கலாம். இது சிறந்த பலன் அளிக்கும்.
உருளைக் கிழங்கு பேஸ்ட்
வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு – 1, தேன் – 2 ஸ்பூன்
பால் – 2 ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1 ஸ்பூன்.
இவை அனைத்தயும் ஒன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். அதனை விரல்களின் மீது தடவி 20 முதல் 25 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவிட வேண்டும். ஒரு நாளைக்கு 2 முறை இதை செய்து வந்தால் சீக்கிரமே நல்ல முன்னேற்றம் தெரியும்.
நெல்லிக்காய் சாறு
நெல்லிக்காயில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளதால் விரல்களில் உள்ள கருமையைப் போக்கி உண்மையான நிறத்தைத் தருகிறது. சில நெல்லிக்காய்களை நீரில் போட்டு 5 நிமிடம் வேக வைத்து எடுத்து பின்னர் அந்த நீரினை குளிரச் செய்ய வேண்டும்.
நெல்லிக்காய் வேக வைத்த நீரை சிறுது பஞ்சில் தொட்டு விலர்களின் மேல் மசாஜ் செய்ய வேண்டும். 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவிட வேண்டும். இதை நாள் ஒன்றுக்கு 2 முறை செய்ய வேண்டும்.
Comments
Post a Comment