உதடு வெடிப்பா? இதை செய்யுங்க...!
உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு சிலருக்கு இரத்தம் கசியும். உதடு கறுத்து விடும் இதைப் போக்க வெந்தயத்தை 1 ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலை எழுந்ததும் ஒரு டம்ளர் மோரில் அந்த வெந்தயத்தை போட்டு குடித்து விடவேண்டும். இரவில் வெண்ணையை சிறிதளவும் உதட்டில் தடவவும். சிறு உருண்டையை விழுங்கிவிடவும். இப்படிச் செய்து வந்தால் உதடு பழைய பொலிவுக்கு வந்து விடும்.வயிற்றுப்புண்களும் நீங்கும்.
பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.
வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.
Comments
Post a Comment